1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (11:40 IST)

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: 8 ஆம் தேதி முதல் லாரிகள் ஸ்ரைக்!!

விவசாயிகளுக்கு அதரவாக அனைத்து இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கூட்டமைப்பும் (ஏஐஎம்டிசி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 
 
மத்திய அரசின் வேளண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. 
 
இந்நிலையில், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய டாக்சி சங்கம் அறிவித்த நிலையில் தற்போது அனைத்து இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கூட்டமைப்பும் (ஏஐஎம்டிசி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 
 
ஆம், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு தீர்க்காவிட்டால், வட இந்தியா முழுவதும் வரும் 8 ஆம் தேதி முதல் லாரிகளை இயக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். தேசத்துக்கு அன்னதானம் செய்யும் விவசாயிகளுக்கு முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம் என கூறியுள்ளனர்.