தக்காளியை தரையில் கொட்டி போராட்டம் செய்த விவசாயிகள்.. கிலோ ரூ.10 என்பதால் அதிர்ச்சி..!
தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் உள்ள சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு இன்று தக்காளியை அவர்கள் மொத்தமாக வாங்கும் வியாபாரிகளிடம் விற்பனை செய்த போது ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் என விலை நிர்ணயம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வியாபாரிகள் உரிய விலை தராமல் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினர்.
இதனை அடுத்து தாங்கள் கொண்டு வந்த தக்காளியை மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டி போராட்டம் செய்தனர். தக்காளிக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விவசாயிகளை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva