1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2024 (16:52 IST)

டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் முடிவில் திடீர் மாற்றம்.. திரும்ப பெற்றதாக தகவல்..!

delhi farmers protest
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த விவசாயிகள் திடீரென தங்கள் முடிவை திரும்ப பெற்றதாகவும், மீண்டும் பஞ்சாப், ஹரியானா மாநிலத்திற்கு திரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் சென்று கொண்டிருந்த நிலையில், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதாக  தெரிகிறது. இதன் காரணமாக பல விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டதால், இன்று நடத்த இருந்த டெல்லி நோக்கி செல்லும்ன் பேரணியை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தடியடி காரணமாக ஆறு விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பேரணியை திரும்ப பெறுவதாகவும் இரண்டு அமைப்புகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். மேலும், இது குறித்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த கட்ட போராட்டம் எப்போது என்பது குறித்து அறிவிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராடி வந்த நிலையில், அங்கிருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் செல்ல முயன்றனர் என்பதும், அவர்களை தடுக்க காவல்துறையினர் சில அடி தூரத்தில் தடுத்து நிறுத்தி கண்ணீர் புகையை வீசினார்கள் என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva