1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (18:07 IST)

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வருமா? சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!

தான் நடித்த வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை நிலைநாட்டிய படங்களில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. அதன் பின்னர் அவரை வைத்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தனது முதல் படமான  ஹரிகுமார் நடித்த திருத்தம் என்ற படத்தில் நிகழ்ந்த தவறு பற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்கானலில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு ‘அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே கூடாது. ஏனென்றால் அது ஒரு எபிக் படம். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் ஜாலியாக எடுத்த படம். அதை திரும்ப எடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.