திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (13:25 IST)

டெல்லியை நோக்கி முன்னேறி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு: பெரும் பரபரப்பு

டெல்லியை நோக்கி முன்னேறி வரும் விவசாயிகள் பேரணி மீது கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பயிர்களுக்கு MSP-ஐ உறுதி செய்ய புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேரணி இன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் பேரணியை தடுக்க மத்திய அமைச்சர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று  டெல்லியில் நுழைகின்றன
 
விவசாயிகளை தடுக்க தரையில் ஆணிகளை பதித்து, சிமெண்ட்      தடுப்புகளை டெல்லி போலீஸ் வைத்துள்ள நிலையில் தடையை மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளை மீது கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆனால் கண்ணீர் புகைக் குண்டுகளை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran