1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (09:06 IST)

“வெ. த. கா. இரண்டாம் பாகம் உறுதி… ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்…” தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படத்துக்குப் பிறகு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே கௌதம் மேனன் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என சொல்லியே ரசிகர்களை அதற்கேற்றார்போல தயார் செய்திருந்ததால், நிதானமாக செல்வதை ரசிகர்கள் ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது உறுதி என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். மேலும் “ஆனால் ஒரே ஒரு கண்டீஷன். படத்தில் கமர்ஷியல் விஷயங்கள் அதிகளவில் இருந்தால்தான் தயாரிப்பேன்” எனக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.