வெள்ளத்தில் பாதித்த கேரளாவுக்கு பேஸ்புக் ரூ.1.75 கோடி நிதி உதவி
கனமழையால் வெள்ளத்தால் சூழ்ந்த கேரள மாநிலத்துக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் ரூ.1.75 கோடி நிதி உதவி அளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ள பாதித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் பலரும் உதவுத்தொகை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கும் என்று கூறியுள்ளது.
சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஃபேஸ்புக்கின் சிறிய பங்களிப்பாக இந்த நிதி வழங்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.