1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (22:09 IST)

இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் அவதூறு பிரச்சாரங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் அவதூறுப் பிரச்சாரங்கள் ஒருபோதும் வெற்றி அடையாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்

 
கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் உலகம் முழுவதும் இந்த போராட்டம் கவனத்தை பெற்றுள்ளது 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் ’இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவற்றை இந்திய மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்திய அரசிற்கு நாம் விவசாயிகளின் பாதுகாப்பில் அக்கறை மிகவும் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது