வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (12:59 IST)

வயநாட்டில் தோல்வி பயம்.! ரேபரேலியில் போட்டி.! ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி..!

Modi Congress
மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
 
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரேபரேலி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
 
மேற்கு வங்கத்தில்  பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் ராகுல் காந்தி போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன் எனக் கூறியுள்ளார். தற்போது அமேதி தொகுதியை விட்டுவிட்டு ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 
இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று அஞ்சாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள் என்றும் நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன் என்றும் அச்சப்பட்டு ஓடாதீர்கள் என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.