வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2023 (21:37 IST)

முன்னாள் துணைமுதல்வருக்கு மேலும் 5 நாட்களுக்கு காவல்- நீதிமன்றம் உத்தரவு

Manish Sisodiya
டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த மாதம் 26 ஆம் தேதி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து, முன்னாள் துணைமுதல்வர் மணீஸ் சிசோடியாவை  சிபிஐ காவலில் விசாரிக்க வேண்டுமென சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, அவரை 14 நாட்கள்  நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில்,  2015 ஆம் ஆண்டு டெல்லி பீட்பேக் என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கியதாகவும், இந்த அமைப்பு ஏற்படுத்தி தகவல் சேகரித்தது தொடர்பாக, அரசுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்லதாகவும் குற்றம்சாட்டி, மணீஸ் சிசோடியா உட்பட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு புதிய வழக்கைப்பதிவு செய்தது சிபிஐ.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது, சொத்துக்குவிப்பு, போலி ஆவணம் தயாரித்தல், அவற்றை ஏமாற்றும் நோக்கத்திற்குப் பயன்படுத்துதல்,  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஸ் சிசோடியாவில் 7 நாள் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டுமெனக் கோரி அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம் சிசோடியாவை மேலும் 5 நாட்களுக்கு விசாரிக்க  அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக  முதல்வர் கெஜ்ரிவால்  நேற்று, தன் டுவிட்டர் பக்கத்தில், மணீஸ் சிசோடியா மீது சிபியை பொய்யான வழக்குகளைப்போட்டு அவரை நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்கும்படி பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சோகம் என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.