முன்னாள் காதலியின் உல்லாச வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட காதலர்
தன்னுடைய காதலியை பழி வாங்குவதற்காக, அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது காதலன் யூடியீப்பில் வெளியிட்ட விவகாரம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
2012ஆம் ஆண்டு அமீர்பெத்தில் உள்ள கல்லூரியில் மல்டிமீடியா படிக்க வந்த அந்த பெண்ணிற்கு, குர்நூல் பகுதியை சேர்ந்த அனில் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். அதை, அந்த பெண்ணுக்கு தெரியாமல் அனில் வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின் அனில், அந்த பெண்ணிடம், தன்னிடம் உள்ள வீடியோவை காட்டி பயமுறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை யூடியூப்பிலும் அவர் பதிவு செய்துவிட்டார்.
இந்த விவகாரம் அந்த பெண்ணிற்கும், அவரது கணவருக்கும் தெரிய வர தற்போது போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட அனிலை போலீசார் தேடி வருகிறார்கள்.