1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (18:14 IST)

சந்திரபாபு நாயுடுவின் 5 வயது பேரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சந்திரபாபு நாயுடுவின் 5 வயது பேரனின் சொத்து மதிப்பு 19 கோடியே 42 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் சொத்து விவரங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த நிதியாண்டு இறுதியில் இருந்து சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளார். 
 
அதில், சந்திரபாபு நாயுடு சொத்துக்களின் நிகர மதிப்பு 3 கோடியே 87 லட்சம், அவரது மகன் லோகேஷுக்கு 19 கோடி, அவரது மனைவி நாரா பிராமணிக்கு 11 கோடியே 51 லட்சம்,  அவரது பேரன் நாரா தேவன்ஸ், 19 கோடியே 42 லட்சம் ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.