செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (15:55 IST)

ஜெகனுக்கு அரசியலில் குடைச்சல் கொடுக்கும் சித்தப்பா மகள்!

ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா மகள் அவரின் அரசியல் நகர்வுகளுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார். 
 
கடந்த ஆண்டு ஜெகனின் சித்தப்பாவும் முன்னாள் அமைச்சருமான விவேகானந்த ரெட்டி,  கடப்பாவிலுள்ள வீட்டில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை சம்மந்தமாக சந்திரபாபு நாயுடு அப்போதே விசாரணைக்கு உத்தரவிட்டார்.
 
இதன் பின்னர் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் தனியே விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் விவேகானந்த ரெட்டியின் மகள் இந்த கொலை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது அந்த மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சிபிஐ விசாரணை கோரும் விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டியால் ஜெகன் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் சிபிஐ விசாரணை வேண்டாம் என ஜெகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், சுனிதா ரெட்டியா ஜெகன் குடும்பத்தினரின் செயல்பாடு குறித்தும் சந்தேகம் எழுப்பி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.