செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (21:56 IST)

நாட்டின் பெயரை கூட மத்திய அரசு மாற்றிவிடும்- மம்தா பானர்ஜி

மத்திய அரசு அரசியலமைப்பை மாற்றிவிட கூடும் என நாங்கள் அச்சப்படுகிறோம் என்று மேற்கு வங்க  மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில்,  டெல்லியில் அதிகாரிகள் இடமாற்ற விவகாரம் பற்றி ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும், அரசுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டமசோதாவை தோற்கடிக்க வேண்டுமென்று  அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல மாநிலங்களுக்கு  கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக இன்று மேற்கு வங்கத்திற்கு சென்ற அவர் முதல்வர் மம்தா பானர்ஜியை  நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,  அரசியலமைப்பை மத்திய அரசு மாற்றிவிடும் என்று அச்சப்படுகிறோம்.  நாட்டின் பெயரைக் கூட அவர் மாற்றிவிடுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைகூட மத்திய அரசு மதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், இவ்விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளித்துள்ளன.

இந்த விவகாரத்தில் கடந்த 11 ஆம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.