திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (13:56 IST)

வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ்.. திடீரென கழண்ட எஞ்சின்.. பயணிகள் மத்தியில் அதிர்ச்சி..!

கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென என்ஜின் மட்டும் கழன்று தனியாக சென்றதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 எர்ணாகுளம்  - டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் கேரளாவில் உள்ள திருச்சூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தத்துடன் ரயில் இருந்து என்ஜின் மட்டும் தனியாக கழண்டது.
 
இதனால் என்ஜினியிலிருந்து கழண்ட பெட்டிகள் தனியாக ஒரு பக்கமும் எஞ்சின் தனியாக ஒரு பக்கமும் சென்று கொண்டிருந்தது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக என்ஜின் மற்றும் பிரிந்த பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்னும் சில நிமிடங்களில் இந்த பணி முடிந்த பிறகு ரயில் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென என்ஜினும் பயணிகள் பெட்டிகளும் தனித்தனியாக கழண்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran