1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (08:26 IST)

எனக்கும் பாலியல் பிரச்சனை நடந்துச்சு: கொதிக்கும் அமலாபால்

கடந்த வாரம் வெளியான ராட்சசன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது, இதில்  நடிகை அமலாபால் பேசியதாவது: 
 
18 வயதில் நான் நடிக்க வந்தபோது ஒரு ஒரு பெரிய ஸ்டாராக வேண்டும் என நினைத்தேன் ஆனால் 8 ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு நடிகையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.  ராட்சசன் என்னடைய 35வது படம். என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்ததுக்கு தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.
 
அதோ அந்த பறவை, ஆடை என இரண்டு படங்களுமே நாயகியை மையப்படுத்திய கதைகள் தான். வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம் என்றார்.
 
இதற்கிடையே  'மீ டூ' குறித்து கேள்விக்கு பதிலளித்த அமலாபால், பாலியல் பிரச்சனை கண்டிப்பாக இருக்கிறது . இது  மூடி மறைக்கக் கூடிய பிரச்சினை இல்லை . சினிமா மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை உண்டு பாலியல் பிரச்சனை குறித்து முதன்முதலில் நான் தான் டுவிட்டரில் தெரிவித்தேன்.
 
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனக்கும் பாலியல் பிரச்சனை ஏற்பட்டது.   எனக்கு பாலியல் பிரச்சனை வந்த போதெல்லாம் அதை எதிர்த்துப் போராடி இருக்கிறேன். 'மீ டூ'  நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன் என்றார்.