செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (13:38 IST)

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜினாமா?

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடு முழுவதும் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து மீ டு என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த  பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், பாஜகவின் மூத்த தலைவரும் வெளியுறவுத்துறை இணைஅமைச்சருமான  எம்.ஜெ.அக்பர் மீது பாலியல் புகார் வைத்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் பல பெண் பத்திரிக்கையாளர்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். இதுகுறித்து எந்த பதிலையும் கூறாமல் இருந்தார் அக்பர்.
 
இந்நிலையில் அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், தன் ராஜினாமா கடிதத்தை மெயில் மூலமாக பிரதமர் மோடிக்கு அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.