வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : திங்கள், 6 மார்ச் 2017 (16:51 IST)

இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன். 21 நிமிடங்களில் சென்னை-பெங்களூரு பயணம்

உலகில் இப்போதைக்கு அதிவேக பயணம் செய்யும் தரை வழி போக்குவரத்தாக புல்லட் ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வகையில் புல்லட் ரயில்களை விட பலமடங்கு வேகத்தில் பயணிக்க வழி செய்யும் போக்குவரத்து முறைகளில் ஒன்றுதான் ஹைப்பர்லூப் ஒன். எலான் மஸ்க் என்பவரது கற்பனையில் உருவான இந்த  ஹைப்பர்லூப் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வணிக ரீதியாக முதல் ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்தை செயல்படுத்த எலான் மஸ்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 


இந்த முதல் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹைப்பர்லூப் டெக்னாலஜீஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராப் லாய்டு என்பவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். அதாவது மும்பை-டெல்லி தூரத்தை வெறும் 80 நிமிடங்களிலும், சென்னை-பெங்களூரு பயணத்தை வெறும் 21 நிமிடங்களிலும் முடித்துவிடலாம்

இந்த திட்டத்தை செயல்படுத்த நாடு முழுவதும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், ஹைப்பர்லூப் ஒன் கட்டமைக்க தேவையான பாகங்களில் சிலவற்றை உள் நாட்டிலேயே தயாரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. நாம் கனவிலும் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பயணம் செய்யும் காலம் வெகுதொலையில் இல்லை என்பதே இந்த திட்டம் நிரூபிக்கின்றது.