1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 டிசம்பர் 2021 (13:13 IST)

உத்தர பிரதேசத்தில் திட்டமிட்டபடி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

உத்தரபிரதேச மாநிலத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் காரணத்தை காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சமீபத்தில் மத்திய அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் உடனே இது குறித்து ஆலோசனை செய்தனர்
 
இந்த நிலையில் சற்று முன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அவர்கள் பேட்டி அளித்தபோது உத்தரபிரதேசத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் 
 
எனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறிய இந்திய தேர்தல் ஆணையர் ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.