செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2025 (16:01 IST)

தலைமை ஆசிரியருடன் பெண் ஆசிரியை உல்லாசம்.. சிசிடிவி காட்சி பார்த்து நடவடிக்கை..!

cctv camera
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் அந்த பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியையைக் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது மற்றும் தகாத செயல்களில் ஈடுபடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ பள்ளி வளாகத்திற்குள் மிக வேகமாக பரவியதோடு, சமூக வலைதளங்களில் பரவி வருவதையடுத்து, தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியைக்கும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி முதல் கட்ட விசாரணை நடத்தி வருவதாகவும், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.