மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!
நாகாலாந்தை தளமாக கொண்ட 'இம்சொங் குளோபல் சப்ளையர்ஸ்' என்ற மனித முடி ஏற்றுமதி நிறுவனம் தொடர்பான சுமார் ரூ. 50 கோடி மோசடி வழக்கில், அமலாக்கத்துறை நாகாலாந்து, அஸ்ஸாம் மற்றும் சென்னை உட்பட ஏழு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
இம்சொங் நிறுவனம் துனிசியா மற்றும் இத்தாலியிலிருந்து வெளிநாட்டு நிதியை பெற்றும், அதற்கான ஏற்றுமதி ஆவணங்களான கப்பல் ரசீதுகள் மற்றும் விலைப்பட்டியல்களை சமர்ப்பிக்கவில்லை. இது FEMA விதிமுறைகளை மீறிய செயலாகும்.
விசாரணையில், இந்த நிறுவனம் தான் பெற்ற வெளிநாட்டு நிதியை, பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 'இன்கெம் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த இன்கெம் நிறுவனத்தை லிமா இம்சொங் என்பவரே நடத்தி வருகிறார். இன்கெம் நிறுவனம் பண பரிமாற்ற கருவியாக செயல்பட்டு, பின்னர் பணத்தை சென்னை நிறுவனங்களுக்கும், லிமா இம்சொங்கின் தனிப்பட்ட கணக்குகளுக்கும் மாற்றியுள்ளது. இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Edited by Siva