வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (13:35 IST)

ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக ED மனு.! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!

hemand soran
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
ஜார்கண்ட் முதல்வராக இருந்த  ஹேமந்த் சோரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் அமலாக்கத்துறையும் இணைந்து ஹேமந்த் சோரன் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. 
 
இதனால் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சாம்பாய் சோரன் இடைக்கால முதல்வரானார். இதனிடையே ஹேமந்த் சோரன் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், ஹேமந்த் சோரன் மீதான வழக்குக்கு முகாந்திரமே இல்லை என கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.

தொடர்ந்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். ஜார்க்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மையையும் நிரூபித்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரனின் ஜாமீன் விடுதலையை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது.

 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது,  ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவையே பிறப்பித்துள்ளதாக கூறி  அமலாக்கத்துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.