திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:05 IST)

பான் இந்திய நடிகர் என்று என்னை அழைக்க வேண்டாம்.. பிரபல நடிகர்..!

sethupathi
நடிகர் விஜய் சேதுபதியை அவரது ரசிகர்கள் பான் இந்திய நடிகர் என்று அழைத்து வரும் நிலையில் என்னை பான் இந்திய நடிகர் என்று அழைக்க வேண்டாம் என அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
தமிழ் மட்டுமின்றி மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. ஹிந்தியில் மற்றும் அவர் மும்பைகார், மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் என்னை ஒரு நடிகர் என்று மட்டும் கூறினால் போதும் என்றும் பான் இந்திய நடிகர் என்று கூறுவது எனக்கு வசதியாக இல்லை என்றும் மாறாக எனக்கு மிகவும் அழுத்தமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய தன்னடக்கத்தை அவருடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்
 
Edited by Siva