செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 நவம்பர் 2018 (16:10 IST)

மோடி கொண்டாடிய வித்தியாசமான தீபாவளி!!!

இந்திய - சீன எல்லைப் பகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திரமோடி அங்கு நம் தேசத்தைக்காக்கும் ராணுவ வீரர்களுடன்  தீபாவளியைக் கொண்டாடினார்.
கடந்த 2014 ல் பிரதமராக பதவியேற்றபோது காஷ்மீர் சியாச்சியிலும், 2015 ஆம் ஆண்டு பஞ்சாப்பிலுள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தீபாவளியைக் கொண்டாடினார். 2016 ஆம் ஆண்டில் இமாச்சல் பிரதேசத்திலும், 2017 ஆம் ஆண்டு காஸ்மீரிலுள்ள குரிஸ் என்னுமிடத்தில் தீபாவளி கொண்டாடினார். இந்த ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் சீனா எல்லை அருகில் ஹ்ர்சில் என்னுமிடத்தில் தீபாவளி கொண்டாடினார்.
 
இதை பலரும் வரவேற்றுள்ளனர்.