வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (11:55 IST)

பொதுமக்கள் மீது காரை ஏற்றிய வாலிபர்: பதறவைக்கும் வீடியோ

சாலையோரத்தின் நடைமேடையில் இருந்த பொதுமக்களின் மீது கார் ஒன்று விரைவாக வந்து மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

நடைமேடையில் ஒரு கடையின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென நடைமேடையின் மீது ஏறியது. இந்த மோதலால் நடைமேடையின் மீது இருந்த நபர்கள், தூக்கி வீசப்பட்டனர். இந்த மோதலில் வீசப்பட்டவர்கள் பலத்த காயமுற்றனர்.

இதனைத் தொடர்ந்து கார் ஓட்டியவரை அப்பகுதியில் இருந்த பொது மக்கள் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதன் பின்பு அவரை, போலீஸிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.