வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (11:40 IST)

திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான்: பிரதமர் மோடிக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்..

MK Stalin
சமீபத்தில் பிரதமர் மோடி பேசிய போது திமுக குடும்ப அரசியல் நடத்துவதாக கூறியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ’ஆம் திமுக குடும்ப அரசியல் தான் நடத்துகிறது என்று தெரிவித்துள்ளார். 
 
திமுகவினர் குடும்ப அரசியல் நடத்தி வருவது உண்மைதான் என்றும் திமுகவினர் குடும்பம் குடும்பமாக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்று இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தமிழ்நாடும், தமிழர்களும் கருணாநிதியின் குடும்பம் தான் என்றும் பிரதமர் மோடி திமுக நடத்துவது குடும்ப அரசியல் என்ற போது அதற்கு பதில் கூறியுள்ளார். 
 
மேலும் உங்கள் எல்லாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது கெட்டதை கூட தைரியமாக செய்தோம் என்றும் ஆனால் தற்போது நல்லதை கூட பயந்து பயந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran