செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 24 ஜூலை 2017 (19:22 IST)

பணி நேரம் முடிவடைந்ததால்; ரயிலை பாதியில் விட்டு சென்ற ஓட்டுனர்!!

மத்தியப் பிரதேசத்தில் ரயில் ஓட்டுனர் ஒருவர் தனது பணி நேரம் முடிவடைந்ததால், ரயிலை பாதியில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தாதியா ரயில் தடத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் மற்ற சரக்கு ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. நீண்ட நேரமாகியும் அந்த ரயில் புறப்படாததால் மற்ற சரக்கு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் மாற்றி விடப்பட்டது.
 
இதானால் பல எக்ஸ்பிரஸ் ரயில்களும் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. பின்னர் அந்த நின்றுகொண்டிருக்கும் ரயிலை பற்றி விசாரிக்கப்பட்டது. அதில், பணி நேரம் முடிவடைந்ததால் ரயில் ஓட்டுநர் சரக்கு ரயிலை நிறுத்தி விட்டு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.