1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (17:57 IST)

சம்பள பாக்கி கேட்ட டிரைவரை 'பெல்ட்'டால் அடித்த இளம்பெண்கள்: அதிர்ச்சி சம்பவம்

beat
சம்பள பாக்கி கேட்ட டிரைவரை 'பெல்ட்'டால் அடித்த இளம்பெண்கள்: அதிர்ச்சி சம்பவம்
சம்பள பாக்கி கேட்ட டிரைவரை பெண் ஊழியர்கள் 5 பேரை சரமாரியாக தாக்கிய சம்பவம் சத்தீஷ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராயல் டிராவல்ஸ் என்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் தினேஷ் என்ற டிரைவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளத்தை அந்த நிறுவனம் தரவில்லை 
 
இந்த நிலையில் ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் தனக்கான சம்பள பாக்கியை தருமாறு கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து மேனேஜரின் செல்போன் எண்ணை தரும்படி பெண் ஊழியர்களிடம் அவர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் ராகுலை சரமாரியாக தாக்கினார்கள். பெல்ட், மற்றும் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தன்னை தாக்கிய பெண்கள் மீது ராகுல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்