ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 4 மே 2020 (20:53 IST)

அடேங்கப்பா...ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மதுவிற்பனை!

கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே நாடு முழுவதும் இரண்டு கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவை முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமானது நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என்பதுதான்.

தமிழகம் புதுவை உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மதுக்கடைகள் இன்னும் திறக்கவில்லை என்றாலும் அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கடந்த 40 நாட்களுக்கு மேல் மதுவை வாங்காமல் இந்த மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக விலகலையும் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களும்  மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் நீண்டநாள்கள் கழித்து இன்று மதுபானக் கடைகளை அரசு திறந்துள்ள நிலையில், இன்று ஒருநாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.