1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (17:38 IST)

சாக்கடை, கழிவுநீர் மரணத்தில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய அமைச்சர் தகவல்...!

Drainage
சாக்கடை மற்றும் கழிவுநீர் மரணத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 308 மரணங்கள் நிகழ்ந்துள்ளதா என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். 
 
இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 52 பேரும், உத்தர பிரதேசத்தில் 46 பேரும், ஹரியானாவில் 40 பேரும், மகாராஷ்டிராவில் 38 பேரும், டெல்லியில் 33 பேரும் இறந்துள்ளனர் என மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வலே தெரிவித்துள்ளார். 
 
சாக்கடை மற்றும் கழிவு நீர் மரணத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran