தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை: மத்திய தொழில்துறை விளக்கம்..!
தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என்றும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி தரப்படாது என்றும் மத்திய தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் தோண்டி எடுக்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் மத்திய தொழில் துறை விளக்கம் அளித்துள்ளது.
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் ஆரம்ப கட்ட ஆய்வுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியானது என்றும் தமிழக விவசாயிகள் குறிப்பாக தஞ்சை விவசாயிகள் கவலையடைய வேண்டாம் என்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி தரப்படாது என்றும் நிலத்தை மத்திய அரசுக்கு குத்தகைக்கு கொடுக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு உள்ளது என்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து தமிழகத்தில் தஞ்சை டெல்டா பகுதிகள் நிலக்கரி சுரங்கம் அமைக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva