எஜமானரின் திருமணத்தில் பங்கேற்க 26 மணி நேரம் பயணம் செய்த நாய்க்குட்டி!

எஜமானரின் திருமணத்தில் பங்கேற்க 26 மணி நேரம் பயணம் செய்த நாய்க்குட்டி!
siva| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (16:40 IST)
எஜமானரின் திருமணத்தில் பங்கேற்க 26 மணி நேரம் பயணம் செய்த நாய்க்குட்டி!
தன்னை வளர்த்த எஜமானரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக நாய்க்குட்டி 26 மணிநேரம் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்த கேரள பெண் ஒருவர் நாய்க்குட்டியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். சமீபத்தில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால் அவர் தனது சொந்த நாடான இந்தியாவில் உள்ள கேரளாவிற்கு வந்தார். திருமண ஏற்பாடுகள் முடிவு பெற்று, திருமண தேதியும் குறிக்கப்பட்டது

இந்த நிலையில் தனது துபாய் வீட்டில் வசித்து வந்த நாய் தன்னுடைய திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த பெண் விரும்பினார். இதனை அடுத்து அந்த நாய் துபாயிலிருந்து கேரளா வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன

எஜமானர் திருமணத்திற்காக அந்த நாய்க்குட்டி 26 மணிநேரம் விமானம் மற்றும் சாலை வழியாக பயணம் செய்துள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது எஜமான் திருமணத்தில் பங்கேற்பதற்காக 26 மணிநேரம் பயணம் செய்த நாய் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :