தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!
தெலுங்கானா மாநில கவர்னர் மாளிகையில் முக்கிய ஆவணங்கள் திருட்டு போய்விட்டதாக கூறப்படும் நிலையில், ராஜ்பவன் ஊழியர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்களை திருடிச் சென்றதாக கூறப்படும் தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 மணி நேரமும் பாதுகாப்பு அம்சம் கொண்ட தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஒருவர் எப்படி உள்ளே நுழைந்து திருட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 14ஆம் தேதி, ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள 'சுதர்மா பவன்' இல் பொருட்கள் கலைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் டிஸ்க்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜ்பவன் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஊழியர்களின் துணை இல்லாமல் வெளியே இருந்து ஒரு நபர் உள்ளே வந்து திருட முடியாது என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran