கடவுள் சிலைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் !
உத்தரபிரதேச மாநிலத்தில் கடவுள் சிலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்ட மருத்துவமனையில் ஒரு பூசாரி வந்துள்ளார். அவர் தன்னிடம் இருந்த கிருஷ்ணன் சிலை கீழே விழுந்து உடைந்துவிட்டதாகக் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் பூசாரி கொண்டு வந்த கிருஷ்ணர் சிலைக்கு பேண்டேஜ் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
மேலும், கடவுள் சிலை கீழே விழுந்ததால் அழுதுகொண்டு வந்த பூசாரியை திருப்திபடுத்தும் நோக்கில் மருத்துவர்கள் ஈவாறு செய்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.