செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2016 (08:49 IST)

நர்ஸை ஏமாற்றி காரியத்தை முடித்த மருத்துவர்

ஹரியானா மாநிலத்தில் தனியார் மருத்துவனை மருத்துவர் ஒருவர் நர்ஸை திருமணம் செய்து கொள்வதாக கூறி, நீண்ட நாட்களாக அந்த நர்ஸை உறவுக்காக பயன்படுத்தியுள்ளார்.


 

 
ஹரியானா மாநிலம் குரோகானில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் கிரிஸ் ஒஜா என்பவர், அதே மருத்துவமனையில் பணியில் இருக்கக்கூடிய இளம் வயது செவியிலருடன் தொடர்ந்து உறவு வைத்துக்கொண்டு வந்துள்ளார். அந்த செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். 
 
இந்நிலையில் மருத்துவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து அந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
அதனால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மீண்டும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் மருத்துவர் தலைமறைவாகி விட்டார். தற்போது, மருத்துவரை அலகாபாத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.