தொழிலாளியின் சம்பளத்தை முதலாளி என்ன செய்தார் தெரியுமா...?
சவுதி அரேபியா நாட்டில் ஹெயில் என்ற நகரில் மிஸ்பர் அல் சமாரி என்பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதற்கு முன் இந்த நிறுவனத்தை நடத்தி வந்த மிஸ்பரின் அப்பாவிடம் இந்திய இளைஞர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அவருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை மிஸ்பரின் அப்பாவால் தரமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நீ உழைத்த பணம் உனக்கே கிடைக்கும் என மிஸ்பரின் அப்பா அவரிடம் கூறியுள்ளார்.
இதில் துக்கமான விஷயம் என்னவென்றால் சவுதியில் இருந்து இந்தியா திரும்பிய போது இளைஞர் விபத்தில் உயிரிழந்தார் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மிஸ்பரின் அப்பா, தன் மகனிடம் இளைஞருக்கு வழங்க வேண்டிய பணத்தை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து மிஸ்பர் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய இளைஞருக்கு வழங்க தர வேண்டிய சம்பள பாக்கியான ரூபாய் 112000 க்கான செக்கை அளித்து இறந்த தொழிலாளியின் குடும்பத்திடம் கொடுத்து விடுமாறு கூறினார்.தற்போது அந்த இளைஞ்ரின் குடும்பத்தாரிடம் அந்த செக் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.
மண்ணில் மனித நேயம் மரிக்கவில்லை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.