1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஜூன் 2024 (10:36 IST)

உச்சி மதிய நேரத்தில் சாப்பாடு ஆர்டர் பண்ணாதீங்க..! – ஸொமாட்டோ கோரிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உச்சி மதிய வேளையில் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என ஸொமாட்டோ வேண்டுகோள் விடுத்துள்ளது.



நாடு முழுவதும் ஸொமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செயலிகள் செயல்பட்டு வரும் நிலையில் மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான உணவுகளை இந்த செயலிகள் மூலமாக ஆர்டர் செய்து வருகின்றனர். சமீபகாலமாக வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் வேகமாக அதிகரித்துள்ளது. டெல்லி, உத்தர பிரதேசம், ஒடிசா என பல மாநிலங்களில் வெப்ப அலையில் சிக்கி பலர் பலியாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் உச்சி வெயில் நேரத்தில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு பல மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் இரவு , பகல் பாராமல் உணவு டெலிவரி செய்து வரும் ஊழியர்களும் வெயிலின் தாக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்ட ஸொமாட்டோ நிறுவனம், உச்சி வெயில் மதிய வேளைகளில் அவசியமான தேவையை தவிர்த்து உணவு ஆர்டர் செய்வதை குறைத்துக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ் தளம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. உணவு டெலிவரி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்ட இந்த வேண்டுகோளுக்கு பலர் ஸொமாட்டோ நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K