செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (13:50 IST)

ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி இல்லை: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா குறித்து பேச அனுமதி அளிக்கவில்லை என கூறப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சபாநாயகர் இடம் வேண்டுகோள் கொடுத்தனர். 
 
ஆனால் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை அடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முழக்கமிட்டதன் காரணமாக மக்கள் அவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. 
 
முன்னதாக திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran