திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (13:03 IST)

அதிமுக, திமுக இன்றி பாஜக தலைமையில் 3வது அணி? அமித்ஷாவின் பலே திட்டம்..!

Modi Amitshah
அதிமுக மற்றும் திமுக இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் அமித்ஷாவின் பலே  திட்டம் என தற்போது தகவல் கசிந்து உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித்சாவை நேற்று சந்தித்த நிலையில் தமிழகத்தில் புதிய கூட்டணி அமைக்க இருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுகவை வீழ்த்த பலவீனமாக உள்ள அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சிறந்தது அல்ல என்ற கருத்தை அண்ணாமலை முன் வைத்துள்ளதாகவும் இதனை அடுத்து அதிமுக திமுக இல்லாமல் மற்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க அண்ணாமலை மற்றும் அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த கூட்டணியில் தேமுதிக, தினகரன் கட்சி, சசிகலா பிரிவு, ஓபிஎஸ் பிரிவு, பாமக  அல்லது விடுதலை சிறுத்தைகள்,  உள்ளிட்ட கட்சிகளை இணைக்க திட்டமிட்டு வருவதாகவும் இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran