செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (16:48 IST)

தீபாவளி பட்டாசு வாங்கினால் ரூ.200 அபராதம், 6 மாதம் ஜெயில்: அதிர்ச்சி அறிவிப்பு!

crackers
தீபாவளிக்கு பட்டாசு வாங்கினாலோ விற்பனை செய்தாலோ வெடித்தாலோ 200 ரூபாய் முதல் ரூ.5000 அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் என்ற அறிவிப்பை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது 
 
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாட்ட இருக்கும் நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகி உள்ளதால் அங்கு பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
தடையை மீறி பட்டாசு வாங்கி வெடித்தால் 200 ரூபாய் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்தால் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran