செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (10:33 IST)

தீபாவளி வந்தாச்சு… போட்டோ போட்டு மகிழ்ச்சியை வெளியிட்ட மாளவிகா!

நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக் குவித்துள்ளன.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

இதையடுத்து அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லை. இப்போது மாளவிகா மோகனன் பிரபல ராப் இசைக்கலைஞரான பாட்ஷாவோடு இணைந்து ‘TAUBA’ என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இது மாளவிகா நடிக்கும் முதல் இசை ஆல்பம் ஆகும்.

சோஷியல் மீடியா மூலமாக தொடர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தீபாவளி தொடங்கியாச்சு என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.