திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (17:56 IST)

இண்டெர்நெட்டில் டிரெண்டிங் ஆகும் பிசாசு உதடு ....

இணையத்தில் நாள்தோறும்   பல்வேறு விஷயங்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் தற்போது இயற்கைக்கு மாறான பிசாசு உதடுகளை வைத்துக்கொள்ளுவதும் பரவலாகி வருகிறது.
உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
 
இந்நிலையில், பேய் போன்ற உதடுகள் கொண்ட பேஷன் ரஷ்ய நாட்டில் இருந்து பரலாகி வருகிறது. இதற்கு பிசாசு உதடுகள் அல்லது ஆக்டோபஸ் உதடுகள் என அழைக்கப்படுகிறது.
 
இந்த பேய் போன்ற உதடுகளை முதலில் பார்த்த போது, எதோ போட்டோ ஷாப் செய்த புகைப்படங்கள் என மக்கள் நினைத்தனர். ஆனால் அவையெல்லாம் உண்மையானது என்றும், உதடுகளில்  நிரப்பிகளை உட்செலுத்தி இப்படி அலையலையாக தோற்றம் பெறச் செய்துள்ளனர்.
 
இது மிகவும் ஆபத்தானது என அழகுச் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் , மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.