பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்கவும்: தேவஸ்தானம் அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக அதிக அளவில் சபரிமலையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்கவும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் விடுமுறை என்பதாலும் மகர விளக்கு தரிசனம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் இந்த நாட்களில் அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். எனவே இந்த நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண் குழந்தைகள் வர வேண்டாம் என்றும் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜை தினத்தன்று பாதுகாப்புக்காக கூடுதல் காவல் துறையினர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகலாம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக கூட்டம் உள்ள நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வருகை தந்து சிரமப்பட வேண்டாம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்
Edited by Mahendran