செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (09:24 IST)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேர்களுக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த மாதம் நான்கு லட்சத்திற்கும் அதிகமாக தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,848 என மத்திய சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1358 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் இதனை அடுத்து இந்தியாவில் மொத்தம் 390660 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 643194 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் இதுவரை 2,89,94,855 பேர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 68817  பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது