வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (07:16 IST)

ஆர்டர் செய்த அன்றே டெலிவரி: பிளிப்கார்ட் அறிமுகம் செய்யும் புதிய வசதி..!

இ காமெர்ஸ் நிறுவனங்களின் போட்டி அதிகமாகி வரும் நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக  இகாமர்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 
 
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி இ காமெர்ஸ் பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனமான பிளிப்கார்ட் ஆர்டர் செய்த அன்றே டெலிவரி செய்யப்படும் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது 
 
 முதல்கட்டமாக இந்த வசதி சென்னை கோவை உள்பட 20 இந்திய நகரங்களில் அறிமுகம் செய்துள்ளதாகவும் இந்த வசதியின் படி பிற்பகல் ஒரு மணிக்குள் ஆர்டர் செய்யும் பொருட்கள் அன்று இரவே டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த அறிவிப்பில் அத்தியாவசிய பொருட்கள், செல்போன்கள், புத்தகங்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை டெலிவரி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 20 நகரங்கள் போக விரைவில் கூடுதல் இந்திய நகரங்களில் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva