1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Delhi subway in aseembly connect red fort

செங்கோட்டையை இணைக்கும் ரகசிய சுரங்கபாதை! – டெல்லியில் மர்மம்!

National
டெல்லியில் சட்டமன்றத்திலிருந்து செங்கோட்டையை இணைக்கும் சுரங்கபாதை கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்டமன்ற கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான திறப்பு ஒன்றை சமீபத்தில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதை ஆய்வு செய்கையில் அது ஒரு சுரங்க பாதை என தெரிய வந்துள்ளது. சுரங்க பாதையை பின் தொடர்ந்ததில் அது 6 கி.மீ தூரம் பயணித்து டெல்லி செங்கோட்டையை அடைவதாக தெரிய வந்துள்ளது.

இந்த சுரங்கபாதையை அமைத்தது யார்? எந்த காலத்தில் அமைக்கப்பட்டது? என்பது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தாலிபன்களை விரட்டத் தயாராகும் அடிபணியாத 'சிங்கப் படை' - கள நிலவரம்