செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2020 (16:02 IST)

இலவச டிக்கெட் பெற இப்படி ஒரு வழியா? – தோப்புக்கரணம் போட சொன்ன மெஷின்!

டெல்லியில் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட்டை இலவசமாக பெற அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய எந்திரம் குறித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

டெல்லியில் உள்ள ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் இலவச நடைமேடை டிக்கெட் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த எந்திரம் இடும் கட்டளைகளை செய்தால்தான் நமக்கு டிக்கெட் கிடைக்கும். பெரிதாக ஒன்றும் இல்லை ஒரு சில உடற்பயிற்சிகளை செய்ய சொல்லும்.

இதோ ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த மாதிரியான வழிமுறைகளால் மக்களுக்கு டிக்கெட்டுக்கான பணம் மிச்சப்படுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என பலர் இந்த எந்திரத்தை பாராட்டியுள்ளனர்.