திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (07:30 IST)

டுவிட்டர் இந்தியா மீது பாய்ந்தது போக்சோ: அதிர்ச்சி தகவல்!

சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு உள்ளவர்கள் மீது மட்டுமே போக்சோ சட்டம் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது டுவிட்டர் இந்தியா மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டுவிட்டர் இந்தியா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் புகார் ஒன்றை டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்தனர். அந்த புகாரில் சிறுவர்களின் ஆபாச படங்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த புகாரின் பேரில் தான் டெல்லி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து தற்போது டுவிட்டர் இந்தியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்திய அரசுக்கும், டுவிட்டர் நிர்வாகத்திற்கும் இடையே புதிய சமூகவலைத்தளம் கொள்கை குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்து சர்ச்சை ஆன நிலையில் தற்போது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது