1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Delhi police arrest a terrostist

ஆயுதங்களுடன் டெல்லியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி! – கைது செய்த போலீஸ்!

Delhi
டெல்லியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் டெல்லியில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்த ஏகே 47 துப்பாக்கிகள், 2 பிஸ்டல்கள் மற்றும் கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
வேகமாக பரவும் டெங்கு… மக்களே உஷார்!