டெல்லியில் புழுதிப்புயல்; மக்களுக்கு எச்சரிக்கை

Dust Strom
Last Updated: சனி, 9 ஜூன் 2018 (18:05 IST)
டெல்லியில் இன்று மாலை புழுதிப்புயல் வீசியதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

 
இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிரது. கர்நாடகா மாநிலம் மற்றும் மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் புழுதிப்புயல் வீச துவங்கியுள்ளது. 
Dust Strom 1
இதனால் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மின்சாரம் மற்றும் தொலைபேசியை துண்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் புழுதிப்புயல் வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் காற்று மாசுயடைந்ததும் இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :